in

Chicken Popcorn Recipe in Tamil | சிக்கன் பாப்கார்ன் செய்வது எப்படி | Chicken Recipes | Cookd

https://bit.ly/cookd-tamil

மிகவும் சுவையான சமையல் வீடியோக்களுக்கு இந்த லின்கை கிளிக் செய்து சப்ஸ்க்ரைப் செய்யவும் @ https://bit.ly/cookd-tamil

சிக்கன் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும் அதிலும் சிக்கன் பாப்கார்ன் ஒரு தனி சுவை மிகுந்த ரெசிபி. மிகவும் எளிய முறையில் குறைந்த நேரத்தில் சுவையான சிக்கன் பாப்கார்ன் செய்து உண்டு மகிழுங்கள். இந்த ரெசிபியை செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.

சிக்கன் பாப்கார்ன் செய்ய தேவையான பொருட்கள்:

சிக்கன் – 300 கிராம்
தயிர் – 1 கப்
மைதா – 1 கப்
உப்பு – 2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
வெங்காய பவுடர் – 1 டீஸ்பூன்
பூண்டு பவுடர் – ½ டீஸ்பூன்
உலர்ந்த ஓரிகானோ – ½ டீஸ்பூன்
மிளகு தூள் – 1 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் – ¼ டீஸ்பூன்
எண்ணெய் – வறுக்க தேவையான அளவு

செய்முறை:

1. எலும்பில்லாத சிக்கனை நன்றாக துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில், தயிரை நன்றாக கலக்கி, 1 டீஸ்பூன் உப்பு மற்றும் ½ டீஸ்பூன் மிளகு தூள் சேர்த்து கொள்ளவும்.
3. வெட்டிவைத்த சிக்கனை சேர்த்து 60 நிமிடத்திற்கு ஊற வைக்கவும்.
4. மற்றொரு பாத்திரத்தில், மைதா, பேக்கிங் பவுடர், உப்பு, மிளகு தூள், சிவப்பு மிளகாய் தூள், வெங்காய பவுடர், பூண்டு பவுடர், ஓரிகானோ சேர்த்து கலந்து கொள்ளவும்.
5. ஊறவைத்த சிக்கனை, கலந்து வாய்த்த மாவுடன் நன்றாக கலந்து, 3-5 நிமிடத்திற்கு நன்றாக பொரிக்கவும்.
6. சூடாக தக்காளி சாஸ் அல்லது மயோன்னைஸ் உடன் பரிமாறவும்.

உங்கள் சமயலறைக்கு மிகவும் அதிக தரமான சமையல் பாத்திரங்கள் வாங்க இந்த லின்கை கிளிக் செய்து Cookd ஷாப்பில் வாங்குங்கள் – https://shop.cookdtv.com
எங்களின் Facebook பக்கத்தை லைக் செய்யவும் – https://www.facebook.com/CookdTV/
எங்களை Instagram இல் பின்தொடர இந்த லின்கை கிளிக் செய்யுங்கள் – https://www.instagram.com/cookdtv/
எங்களை Twitter இல் பின்தொடர இந்த லின்கை கிளிக் செய்யவும் – https://twitter.com/CookdRecipes

source

2 Semiya Dessert Recipes || Semiya Custard, Semiya Kheer Recipe || RR Tasty Kitchen

МУСАКА С ПИЛЕШКО МЕСО/CHICKEN MOUSSAKA BULGARIAN RECIPE