ESC

Search on this blog

சிக்கன் வடை | Chicken Vada Recipe in Tamil

சிக்கன் வடை | Chicken Vada Recipe in Tamil


We also produce these videos on English for everyone to understand Please check the link and subscribe https://www.youtube.com/watch?v=vXAiWY17Jgc சிக்கன் வடை தயாரிப்பு நேரம் - 90 நிமிடங்கள் சமையல் நேரம் - 40 நிமிடங்கள் தேவையான பொருட்கள் சிக்கன் - 300 கிராம் கடலை பருப்பு - 1/2 கப் இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி உப்பு - 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி வெங்காயம் - 1 ( பொடியாக நறுக்கிய ) பச்சை மிளகாய் - 2 ( பொடியாக நறுக்கிய ) இஞ்சி - 1 துண்டு (பொடியாக நறுக்கிய ) சோம்பு - 1/2 தேக்கரண்டி கொத்துமல்லி இலை கறிவேப்பிலை எண்ணெய் தண்ணீர் #சிக்கன்வடை #ChickenVada #VadaRecipe செய்முறை 1. முதலில் சிக்கனை வேக வைக்க வேண்டும் 2. ஒரு குக்கரில் சிக்கன் துண்டுகள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஐந்து விசில் வரும் வரை வேக வைக்கவும் 3. சிக்கன் வெந்தவுடன் சிறிது நேரம் ஆற விட்டு எலும்புகளை நீக்கவேண்டும். பின்பு சிக்கன் துண்டுகளை சிறிது சிறிதாக கையால் உதிர்க்க வேண்டும் 4. அடுத்து 1 1/2 மணி நேரம் ஊறிய கடலை பருப்பு, உதிர்த்த சிக்கன் துண்டுகள், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய ஒரு துண்டு இஞ்சி, கறிவேப்பிலை, சோம்பு, தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி இலை ஆகியவற்றை தண்ணீர் இல்லாமல் மிக்ஸியில் அரைக்கவும் 5. அரைத்த மாவுடன் சிறிது கடலை பருப்பை சேர்த்து வடையாக தட்டவும் 6. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பிறகு தட்டிய வடையை போட்டு பொன்னிறமாக பொறிக்க வேண்டும் 7. சூடான சுவையான சிக்கன் வடை தயார் You can buy our book and classes on http://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES WEBSITE: http://www.21frames.in/homecooking FACEBOOK - https://www.facebook.com/HomeCookingShow YOUTUBE: https://www.youtube.com/user/VentunoH... INSTAGRAM - https://www.instagram.com/homecooking... A Ventuno Production : http://www.ventunotech.com
source

Related Recipes:

Newsletter image
Weekly updates

Let's join our newsletter!

Do not worry we don't spam!